/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தில் கால்நடைகள் 'ஓய்வு' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
பாலத்தில் கால்நடைகள் 'ஓய்வு' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பாலத்தில் கால்நடைகள் 'ஓய்வு' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பாலத்தில் கால்நடைகள் 'ஓய்வு' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 16, 2025 01:58 AM

பேரம்பாக்கம்,:கடம்பத்துார் ஒன்றியத்தில் பேரம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில், கூவம் ஆற்று மேம்பாலம் வழியாக, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், பூந்தமல்லி மற்றும் அரக்கோணம் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், கூவம் ஆற்று மேம்பாலத்தில் இளைப்பாறுகின்றன.
இதனால், இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மேம்பாலம் பகுதியில் இளைப்பாறும் கால்நடைகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.