/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் வெளியேற்ற தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மழைநீர் வெளியேற்ற தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
மழைநீர் வெளியேற்ற தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
மழைநீர் வெளியேற்ற தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 25, 2024 08:17 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் 'மிக்ஜாம்' புயல் காரணமாக, வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், திருவள்ளூர் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காக்களூர் ஏரிக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் சாலையில் தண்ணீர் தேங்கியது.
இதனால், குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, காக்களூர் ஏரிக்கரை அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மழைநீர் வெளியேற வழி ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக, ஏரிக்கரை அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட பள்ளத்தில் பொதுப்பணி துறையினர் கால்வாய் கட்டாததால், திறந்தநிலையில் உள்ளது. இதன் காரணமாக, சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, பொதுப்பணி துறையினர் உடனடியாக பள்ளத்தில் கால்வாய் அமைத்து, கரை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

