ADDED : பிப் 01, 2024 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 40. அப்பகுதியில் ஏ.ஆர்.ஸ்டீல்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார்.
கடந்த, 30ம் தேதி மதியம், இவர் சாப்பாடு சாப்பிட வீட்டிற்கு சென்றார்.
அப்போது கடையில் பணியாற்றி வந்த, திவ்யா, 22 என்பவர் கடையை பார்த்துக் கொண்டார்.
அப்போது கடைக்கு வந்த இருவர் திவ்யாவிடம் பேச்சு கொடுத்தபடி, கல்லாவில் இருந்த, 50,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
ராஜா 'சிசிடிவி' கேமராவில் பார்த்தபோது, கடைக்கு வந்த இரண்டு பேர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜா, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், திருடிய இருவரை தேடி வருகின்றனர்.

