/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாய் குறுக்கே வந்த விபத்தில் ஒருவர் பலி
/
நாய் குறுக்கே வந்த விபத்தில் ஒருவர் பலி
ADDED : ஜூன் 03, 2025 07:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே போடிரெட்டிகண்டிகை கிராமத்தில் வசித்தவர் லோகய்யா, 48. நேற்று முன்தினம் இரவு, சின்னஓபுளாபுரம் கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி 'ஹீரோ பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
சின்னஓபுளாபுரம் இணைப்பு சாலையில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.