/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி, நண்பர் காயம்
/
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி, நண்பர் காயம்
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி, நண்பர் காயம்
பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி, நண்பர் காயம்
ADDED : ஜூன் 21, 2025 07:01 PM
பூந்தமல்லி,:பூந்தமல்லி, வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன், 59. அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 42. இருவரும், பூந்தமல்லியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இருவரும் 'ஹோண்டா ஷைன்' பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை பிரபாகரன் ஓட்டி சென்றார்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியை கடந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த சுந்தரேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபாகரன் காயங்களுடன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.