/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனிமங்கள் எடுத்து செல்ல இணையத்தில் அனுமதி சீட்டு
/
கனிமங்கள் எடுத்து செல்ல இணையத்தில் அனுமதி சீட்டு
ADDED : ஜூன் 13, 2025 07:57 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுகனிமங்கள் எடுத்து செல்ல, இனி இணையதளம் வாயிலாக அனுமதி சீட்டு வழங்கப்படும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறுவகை கனிமங்களான சாதாரண கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை, இருப்பு கிடங்கு அமைத்து வாகனங்கள் வாயிலாக வெளியில் கொண்டு செல்ல அனுமதி பெற்ற கிடங்கு உரிமையாளர்களுக்கு, இதுவரை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம் வாயிலாக, நேரிடையாக இடைகடவு சீட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இருப்பு கிடங்குகளிலிருந்து வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும், முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனையை எளிதாகவும், வெளிப்படை தன்மையுடன் நடைபெற, இன்று http://mimas.tn.gov.in என்ற இணைதளம் வாயிலாக வழங்கப்படும்.
அதற்காக, இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படும் நடை சீட்டுக்களின் அடிப்படையில், இடைகடவு சீட்டு வழங்கப்பட உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற இருப்பு கிடங்கு உரிமையாளர்கள், இணையவழி முறையை பயன்படுத்தி இடைகடவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.