/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
/
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
ADDED : மே 13, 2025 09:04 PM
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை, அருகில் உள்ள பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க கடந்த ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதற்கு தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜனவரி 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்ததுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த, 1ம் தேதி, மே தினத்தை முன்னிட்டு தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கிராமக்கள் யாரும் பங்கேற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் மாலை, 3:00 மணிவரை காத்திருந்து திரும்பினர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம், சிங்கிலிமேடு கிராமத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற கிராமவாசிகள், 'தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை, பொன்னேரி நகராட்சியுடன் இணைத்தால், நுாறுநாள் வேலை பறிபோகும். வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் அதிகரிக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நகராட்சியுடன் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்' என வலியுறுத்தினர்.
கலெக்டரிடம் தெரிப்பதாக அதிகாரிகள் கூறி சென்றனர்.

