/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் வாகன 'பார்க்கிங்' ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை
/
சாலையோரம் வாகன 'பார்க்கிங்' ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை
சாலையோரம் வாகன 'பார்க்கிங்' ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை
சாலையோரம் வாகன 'பார்க்கிங்' ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை
ADDED : மே 12, 2025 12:27 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு, ரயில் நிலையம் செல்லும் சாலையில், வாரந்தோறும் சனிக்கிழமை காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது.
இங்கு, 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும் நிலையில், காய்கறி வாகனங்கள், காய்கறி வாங்க வருவோர் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால், தக்கோலம் ---- திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில், தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு காய்கறி வாங்க செல்கின்றனர்.
அவ்வாறு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை இந்த வழியாக நோயாளிகளை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், நகர முடியாமல், 20 - 30 நிமிடம் வரை ஒரே இடத்தில் நின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இனி வரும் காலங்களில் சாலையோரம் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

