/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூடுதல் பஸ்கள் இயக்க பயணியர் கோரிக்கை
/
கூடுதல் பஸ்கள் இயக்க பயணியர் கோரிக்கை
ADDED : பிப் 11, 2024 11:20 PM

கடம்பத்துார்: திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தடம் எண். 82 சி என்ற அரசு பேருந்தை பயன்படுத்தி திருவள்ளூர், மணவாள நகர், மேல்நல்லாத்துர், கீழ்நல்லாத்துார், போளிவாக்கம், செங்காடு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் குறைவாக இயக்கப்படும் பேருந்துக்களால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பணிக்கு செல்லும் பகுதிவாசிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
அரசு பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால், கனரக வாகனங்களை முந்தி செல்லும் போது படிக்கட்டில் பயணம் செய்யும் பகுதிவாசிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளி நேரங்களில் குறைவான பேருந்துகளால் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பகுதிவாசிகள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரதது அதிகாரிகள் இந்த நெடுஞ்சாலை வழியே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

