/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாயை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகள்
/
கழிவுநீர் கால்வாயை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகள்
ADDED : ஜூன் 22, 2025 07:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், செட்டித் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கொய்யாதோப்பு, சிட்ரபாக்கம் செல்லும் மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல், உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.