/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குற்றவாளியை பிடிக்க வந்த போலீஸ்காரர் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு
/
குற்றவாளியை பிடிக்க வந்த போலீஸ்காரர் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு
குற்றவாளியை பிடிக்க வந்த போலீஸ்காரர் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு
குற்றவாளியை பிடிக்க வந்த போலீஸ்காரர் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு
ADDED : ஜூன் 27, 2025 01:47 AM
திருவள்ளூர்:சென்னையில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வந்த தனிப்படை போலீஸ்காரர், திருவள்ளூர் அருகே காரில் தொங்கியபடி சென்று கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சென்னையில், 25 ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ரவுடி 'தோட்டம்' சேகர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மயிலை சிவகுமாரை, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 'தோட்டம்' சேகரின் மகன் அழகுராஜா கொலை செய்தார்.
வழக்கு பதிந்த சென்னை ஜாம்பஜார் போலீசார், அழகுராஜாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், அழகுராஜா திருவள்ளூரில் பதுங்கி இருப்பதாக, சென்னை ஜாம்பஜார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீஸ்காரர் ஆனந்தகுமார் என்பவர், அழகுராஜாவை நோட்டமிட்டு வந்தார். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அருகே, காரில் இருந்த அழகுராஜாவை தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் பிடிக்க முயன்ற போது, அழகுராஜா காரில் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றார்.
காரில் இருந்து சாவியை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என, ஆனந்தகுமார் முயற்சி செய்துள்ளார். இதனால், போலீஸ்காரர் காரை பிடித்து தொங்கிக்கொண்டு, 1 கி.மீ., தொலைவிற்கு சென்றார்.
பின், அவரின் கைகளை அழகுராஜா எடுத்துவிட்ட நிலையில் கீழே விழுந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.