/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர்மண்டி காட்சியளிக்கும் ரயில்வே கால்வாய்
/
புதர்மண்டி காட்சியளிக்கும் ரயில்வே கால்வாய்
ADDED : ஜன 16, 2024 11:30 PM

மணவூர்,திருவள்ளூர் --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் மணவூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே மணவூர், காபுலகண்டிகை பகுதியில் சேகரமாகும் மழைநீர், தண்டவாளத்தை கடந்து பெரிய ஏரிக்கு செல்ல, குறுக்கே கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, இந்த கால்வாய் மண் மூடி அடைபட்டும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
இதனால், மழைக்காலத்தில் மழைநீர் ஏரிக்கு செல்ல வழியின்றி, இப்பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.இதனால், விவசாயிகள் கோடையில் விவசாயத்திற்கு நீரின்றி சிரமப்படும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஏரிக்கு செல்லும் தண்டவாள கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

