/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராம சாலை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை
/
கிராம சாலை திட்டம் நிறைவேற்ற கோரிக்கை
ADDED : ஜன 09, 2024 08:43 PM
திருவள்ளூர்:பாண்டூர் ஊராட்சி, கனகவல்லிபுரம் கிராமவாசிகள், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்துள்ள மனு:
திருவள்ளூர் தாலுகா, பூண்டி ஒன்றியம், பாண்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது கனகவல்லிபுரம் கிராமம். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருந்து, பாண்டூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்தது.
இதையடுத்து, முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் நிதியில், கனகவல்லிபுரம் - பாண்டூர் வரை ஒரு கி.மீ., துாரம், புதிய தார் சாலை அமைக்கும் பணி, கடந்த ஜூலை மாத இறுதியில் துவங்கியது.
இதற்காக, சாலையை தோண்டி, ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஆனால், பணி துவங்கி ஆறு மாதத்திற்கு மேலாகியும், தார் சாலை அமைக்கவில்லை.
இதனால், மோசமான சாலையில் பயணம் செய்யும், கிராமவாசிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலையை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

