/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் கோவில் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை
/
மீஞ்சூரில் கோவில் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை
மீஞ்சூரில் கோவில் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை
மீஞ்சூரில் கோவில் குளத்தை சூழ்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை
ADDED : மார் 21, 2025 02:52 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அருகே உள்ள ராமரெட்டிப்பாளையத்தில், வரசித்தி விநாயகர் கோவில் பின்புறம் குளம் அமைந்து உள்ளது.
நிலத்தடிநீர் பாதுகாப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், குப்பை குவிந்தும் கிடக்கிறது. குளத்தை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் தொட்டியாகவும் மாறி வருகிறது.
மீஞ்சூர் பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கும் நிலையில், இதுபோன்ற நீர்நிலைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
மீஞ்சூரில், 10-12 கி.மீ., தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கா பல லட்சம் ரூபாய் மாதம்தோறும் செலவிடப்படுகிறது. அதே சமயம் உள்ளூரில் இருக்கும் நீர்நிலைகளை பராமரித்து, அதில் மழைநீரை சேமித்து பயன்படுத்துவதற்கான எந்த திட்டமிடலும் இங்கு இல்லை. அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.