/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் குரங்கு தொல்லை அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
/
பொன்னேரியில் குரங்கு தொல்லை அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
பொன்னேரியில் குரங்கு தொல்லை அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
பொன்னேரியில் குரங்கு தொல்லை அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
ADDED : ஜன 25, 2024 08:14 PM

பொன்னேரி,:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை, குடியிருப்புகளின் மீது தாவி தாவி பயணிக்கும்போது, கேபிள் 'டிவி' தொலைபேசி, இன்டர்நெட் கேபிள்களை அறுத்து விடுகின்றன.
குடியிருப்புவாசிகள் வீடுகளின் வெளியிலும், தளத்தின் மீதும் வற்றல், அரிசி உள்ளிட்டவைகளை உலர வைக்கும்போது குரங்குகள் அவற்றை வீணடித்து வருகின்றன.
திறந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே சென்று, அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து உண்ணுகின்றன. அவற்றை விரட்டுவதற்கும் வீட்டில் உள்ளவர்கள் தயங்குகின்றனர்.
குடியிருப்புவாசிகள் வீட்டில் இருந்து வெளியில் வரும் நேரங்களில் கையில் குச்சியை வைத்து கொள்ளும் நிலை உள்ளது. குரங்குகள் வந்தால், வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொள்ளும் நிலை உள்ளது.
எனவே, பொன்னேரி நகராட்சியில் குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதிகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

