/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை: நோய் பரவும் அபாயம்
/
சாலையோரம் குப்பை: நோய் பரவும் அபாயம்
ADDED : பிப் 29, 2024 07:10 PM

அரக்கோணம்:அரக்கோணம் அம்பேத்கர் நகரில், ஓடியன்மணி திரையரங்கம் அருகே பஜார் அமைந்துள்ளது. இங்கு காய்கறி, பூ, பழம் என, 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அரக்கோணம் பஜாரில் இருந்து ரயில்வே பள்ளிக்கூடம் செல்லும் சாலையில், 200 மீட்டர் துாரம் வரை சாலையோரத்தில் இறைச்சி, பழம் மற்றும் காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் கடை வைத்திருப்போர் மற்றும் பஜாருக்கு வருவோர் நோய் தொற்று பாதிப்பில் சிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

