sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி மந்தம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம்

/

மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி மந்தம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம்

மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி மந்தம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம்

மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி மந்தம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம் மீண்டும் திருவள்ளூருக்கு வௌ்ள அபாயம்


ADDED : செப் 12, 2025 02:46 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில், மழைநீர் வெளியேற வழியில்லாததால், திருவள்ளூரை மூழ்கடித்த இயற்கையின் பாடத்தை அதிகாரிகள் மறந்து விட்டனர். தற்போது நடந்து வரும் மழைநீர் கால்வாய் பணியும் ஆமை வேகத்தில் நடப்பதால், வரும் மழை காலத்திலும் திருவள்ளூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தற்போது, நகர் முழுதும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயில் சேகரமாகும் தண்ணீர் வெளியேற வழியில்லை.

மேலும், அதற்கான காரணத்தை, நகராட்சி மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தேடுவதாக தெரியவில்லை. பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகே துவங்கி ஜே.என்.சாலை, அரசு மருத்துமனை பின்புறம் வழியாக, வி.எம்.,நகர், 100 அடி சாலையைக் கடந்து, காக்களூர் ஏரியில் சேரும் பொதுப்பணி துறை கால்வாய் உள்ளது.

மேலும், ஒன்றாவது வார்டான சுங்கச்சாவடியில் துவங்கி, சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, குளக்கரை தெரு, பேருந்து நிலையம் வழியாக, காக்களூர் ஏரிக்கு செல்லும் மற்றொரு நீர்வளத்துறை கால்வாய் உள்ளது. இந்த இரண்டு மட்டுமே, நகரின் மழைநீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்றும் வடிகால்வாய். ஆனால், இந்த இரண்டு பிரதான கால்வாய்களும் ஆக்கிரமிப்பு, துார் வாராதது, கழிவு பொருட்களால் அடைப்பு என, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக, இவ்விரண்டு கால்வாய்களும் துார்ந்து, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளன.

மேலும், ஜெயா நகர், அம்சா நகர், ஏரிக்கரை குடியிருப்பு போன்ற பகுதிகளிலும், மழைநீர் வெளியேற வழியில்லை. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையின் போது, அம்சா நகர், ஜெயா நகர், அய்யனார் அவென்யூ, வி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

நாள் கணக்கில் வெள்ளம் வடியாமல், மக்கள் பரிதவித்து வருகின்றனர். பல ஆண்டுகள் மழைநீரில் நகரம் மிதந்தாலும், இதுவரை தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற தீர்வு காணப்படவில்லை. இரண்டு பிரதான கால்வாய்களும் துார்வாரப்படாமல், அலட்சியமாக விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, நகராட்சி நிர்வாகம் கண்டறிந்து, ஜெயின் நகர், வி.எம்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி துவங்கியது.

ஆனால், பணிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பணிகளை விரைந்து முடிக்க, கலெக்டர் பிரதாப் பலமுறை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், பணியில் முன்னேற்றம் இல்லை.

இதனால், வடகிழக்கு பருவமழை மழைக்காலத்தில், மழைநீர் வெளியேற வழியில்லாமல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மீண்டும் திருவள்ளூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது.

எனவே, நகராட்சி, நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

அதிகாரிகள் அலட்சியம் நகர மக்களுக்கு அல்லல் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், பருவ மழைக்கு முன்பாக, முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும் என, பலமுறை கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால், அவரது அறிவுரையை, எந்த துறையும் பின்பற்றுவதாக தெரியவில்லை. மாவட்ட தலைநகராக திகழும், திருவள்ளூர் நகராட்சியும் பின்பற்றவில்லை. வரும் முன் காப்பதே மேல் என்பதை அறிந்தும், அதிகாரிகள் துறை ரீதியான ஒற்றுமை இன்மையால், வந்த பின் அவசரம், அவசரமாக நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக்கி கொண்டு உள்ளனர். எனவே, இனியாவது விழித்துக் கொண்டு, திருவள்ளூர் நகரில் தாழ்வான பகுதிகள் எவை, தண்ணீர் வெளியேறாமல் தேங்கும் இடங்கள், அவற்றை வெளியேற்றுவது எப்படி, கால்வாயை துார் வாருதல் போன்ற பணிகளை முடுக்கி விடுவது நலம்.








      Dinamalar
      Follow us