/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடையில் புகுந்த சாரை பாம்பு உயிருடன் மீட்பு
/
கடையில் புகுந்த சாரை பாம்பு உயிருடன் மீட்பு
ADDED : ஜூன் 04, 2025 02:32 AM

திருத்தணி:திருத்தணி சுப்பராயமேஸ்திரி தெருவில் வசிப்பவர் சவுந்தர், 33. இவர், நல்லதண்ணீர் குளக்கரை சாலையில், டிஜிட்டல் பேனர் மற்றும் பத்திரிகை அச்சடிக்கும் கடை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் கடை திறப்பதற்காக கடைக்கு வந்தார்.
கடையை திறந்தபோது, திடீரென ஏழரை அடி நீளமுள்ள சாரை பாம்பு கடைக்குள் புகுந்தது. இதை பார்த்த சவுந்தர், கடையின் கதவை பூட்டினார். உடனடியாக, திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேர போராட்டத்திற்கு பின் சாரை பாம்பை உயிருடன் பிடித்து, கன்னிகாபுரம் வனப்பகுதியில் விட்டனர். இதனால், நல்லதண்ணீர் குளம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.