/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்ரீபெரும்புதுார் சாலை 'பஞ்சர்' வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
ஸ்ரீபெரும்புதுார் சாலை 'பஞ்சர்' வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ஸ்ரீபெரும்புதுார் சாலை 'பஞ்சர்' வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ஸ்ரீபெரும்புதுார் சாலை 'பஞ்சர்' வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூன் 04, 2025 02:24 AM

அரண்வாயல்குப்பம்:திருவள்ளூர் அருகே அரண்வாயல்குப்பம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கிருந்து கொப்பூர், பாப்பரம்பாக்கம், மண்ணுார் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.