/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரையும் கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை: கலெக்டர்
/
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரையும் கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை: கலெக்டர்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரையும் கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை: கலெக்டர்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரையும் கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை: கலெக்டர்
ADDED : மே 11, 2025 10:18 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், 'கல்லுாரி கனவு- - 2025' திட்டத்தின் கீழ், பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியரை கல்லுாரியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்துவது குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆயத்த கூட்டம் நடந்தது.
இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த பள்ளி மாணவ - மாணவியரை உயர்கல்வி சேர்ப்பதற்காக, பொன்னேரி கோட்டத்தில் - 2, திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் தலா ஒரு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாமில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வி சேர்க்கும் வகையில் வழிகாட்டுதல் ஏற்படுத்தித்தர வேண்டும்.
சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு மாணவர்களுக்கு உயர் கல்வியால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊக்கப்படுத்தி உயர்கல்வி சேர்ப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
தாய், தந்தை இழந்த மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முகாம் மாணவர்கள், வறுமை நிலையிலுள்ள மாணவியர் ஆகியோரை அடையாளம் கண்டு உயர்கல்விக்குசேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், பொன்னேரி சப் - கலெக்டர் ரவிகுமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

