/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ல் மாணவர் குறைதீர் கூட்டம்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ல் மாணவர் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ல் மாணவர் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ல் மாணவர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 20, 2025 09:11 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கான குறைதீர் கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், நடப்பு 2025 - -26ம் கல்வியாண்டில், அனைத்து மாணவ - மாணவியருக்கும் உயர்கல்வி சேர்க்கை குறித்த ஆலோசனை வழங்குவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு உள்ளது.
மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், கட்டுப்பாட்டு அறையை 93444 10803, 75500 57547 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொண்டு, உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனையை பெறலாம்.
மேலும், மாணவர்கள் சந்திக்கும் நிர்வாக சவால்களை மாவட்ட நிர்வாகம் களைந்து, அனைவரும் உயர்கல்வியில் சேர்வதை உறுதிபடுத்த, கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு மாணவர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், போதிய சான்றிதழ்கள் இல்லாமை, குடும்பமற்ற சமூக சூழல் காரணமாக கல்லுாரி சேர்வதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
மாணவர் மற்றும் அவர்களின் பெற்றோர், இக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.