/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரியில் கிராமத்தினர் முற்றுகை 1 மணி நேரம் சுவாமி தரிசனம் தடங்கல்
/
சிறுவாபுரியில் கிராமத்தினர் முற்றுகை 1 மணி நேரம் சுவாமி தரிசனம் தடங்கல்
சிறுவாபுரியில் கிராமத்தினர் முற்றுகை 1 மணி நேரம் சுவாமி தரிசனம் தடங்கல்
சிறுவாபுரியில் கிராமத்தினர் முற்றுகை 1 மணி நேரம் சுவாமி தரிசனம் தடங்கல்
ADDED : ஜன 16, 2024 11:41 PM
கும்மிடிப்பூண்டி,சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய், ஞாயிறு, விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.நேற்று செவ்வாய்க்கிழமை மட்டுமின்றி விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவிலில் ஏற்படுத்தப்பட்ட வரிசையை கடந்து, ஏராளமான பக்தர்கள் நிரம்பி வழிந்ததால், சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரமானது.
எப்போதும், எளிதாக உள்ளே சென்று தரிசனம் செய்யும் உள்ளூர் வாசிகள், கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதனால், கோபம் அடைந்த உள்ளூர் மக்கள், சன்னிதானத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சென்ற ஹிந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர், கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.
ஓரிரு நாட்களில் கூடி பேசி, உள்ளூர் மக்கள் தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து, உள்ளூர் மக்களின் திடீர் முற்றுகையால், ஒரு மணி நேரம் சுவாமி தரிசனம் ஸ்தம்பித்து நின்றது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

