ADDED : ஜன 16, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கரம்பாக்கம் ஊராட்சி, சந்திராபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 25, என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதையடுத்து, அவரது உடைமைகளை பரிசோதித்த போது, 70 கிராம் எடையுள்ள, 13 கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் மூன்று கத்தி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கஞ்சா, கத்திகளை பறிமுதல் செய்து, வெங்கடேசனை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

