/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு ஊழியர் வீட்டில் பணம், நகை திருட்டு
/
அரசு ஊழியர் வீட்டில் பணம், நகை திருட்டு
ADDED : பிப் 29, 2024 10:46 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ஐ.ஆர்.என்.அவென்யூ நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 34; ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 30. இவர், சென்னை மீன்வளத் துறை இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பீரோவில் 30 சவரன் தங்க நகையும், 40,000 ரூபாயையும் ஸ்ரீதர் வைத்துள்ளார். நேற்று காலை பணத்தை எடுக்க பீரோவை திறந்த போது, 10,000 ரூபாய் குறைவாக இருந்துள்ளது.
இதையடுத்து, மனைவியிடம் கேட்டபோது எடுக்கவில்லை என்று கூறினார். பின், பீரோவில் இருந்த நகையை சரிபார்த்த போது, 11 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

