/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபாசமாக படம் எடுத்து பெண்ணுக்கு மிரட்டல்
/
ஆபாசமாக படம் எடுத்து பெண்ணுக்கு மிரட்டல்
ADDED : ஜூலை 04, 2025 08:37 PM
திருவள்ளூர்:ஆபாசமாக படம் எடுத்து, கொலை மிரட்டல்விடுத்தவர் மீது, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை எஸ்.வி.ஜி.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா, 35. இவர் நேற்று, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்த மனு:
எனக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன். ஆந்திர மாநிலம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரித்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கணவன் - மனைவியாக நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.
கடந்த மாதம் 10ம் தேதி பிரித்வின் மொபைல்போனை பார்த்த போது, நாங்கள் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
இதுகுறித்து கேட்டபோது, 'நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன்னுடைய நிர்வாண வீடியோ மற்றும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' எனக் கூறினார். 'இது தொடர்பாக, போலீசுக்கோ அல்லது வேறு யாரிடமாவது கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டல் விடுத்தார்.
மேலும், பிரித்வின் மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் உறவினர்களான உமா, பழனி, அய்யப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற போலீஸ் எஸ்.பி., சீனிவாச பெருமாள், “விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.