ADDED : ஜூன் 22, 2025 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சேகண்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம், 28. இரு நாட்களுக்கு முன், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த 'யமஹா ஆர்15' பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், பைக் திருட்டில் ஈடுபட்ட பட்டுப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், 18, தானாகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ், 28, விஷால், 20, ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து திருடு போன பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.