/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 27, 2024 01:44 AM
செங்கல்பட்டு:கேலோ இந்திய விளையாட்டு போட்டியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில், இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி, சென்னை, கோயம்புத்துார், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 'சைக்கிளிங்' போட்டியானது, கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில், இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
எனவே, கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு, பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம், ஒ.எம்.ஆர்., வழியாக மாமல்லபுரம் செயல்படலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

