/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 23 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
/
திருவள்ளூரில் 23 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
ADDED : ஜன 09, 2024 10:23 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 23 எஸ்.ஐ.,க்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி என, ஐந்து காவல் உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் காவல் நிலையங்கள், 24 செயல்பட்டு வருகின்றன.
மேலும், ஐந்து அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், நான்கு கலால் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
எதிர்வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தற்போது, மாவட்டம் முழுதும், காவல் துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியிடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, முதல்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும், 23 எஸ்.ஐ.,க்கள் பணியிடமாற்றம் செய்து, எஸ்.பி., சீபாஸ் கல்யாண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.ஐ.,க்கள் பணியிடமாற்ற விவரம்:
பெயர்- தற்போதைய பணியிடம்- புதிய இடம்
என்.ராக்கிகுமாரி- திருத்தணி- திருவள்ளூர் டவுன்
டி.நாகபூஷணம்- திருவாலங்காடு- புல்லரம்பாக்கம்
ஏ.சுசீலா- திருவள்ளூர் டவுன்- அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவள்ளூர்
எம்.பூபாலன்- திருத்தணி- ஊத்துக்கோட்டை
கே.மாலா- புல்லரம்பாக்கம்- வெங்கல்
டி.சத்யநாராயணன்- திருவள்ளூர் டவுன்- வெங்கல்
ஜெ.சாரதி- மணவாளநகர்- திருவாலங்காடு
எஸ்.ரவிச்சந்திரன்- குற்ற ஆவண பாதுகாப்பகம்- மாவட்ட குற்றப்பிரிவு
எம்.பரமசிவம்- திருவாலங்காடு- கடம்பத்துார்
டி.சுப்ரமணி- சமூக நீதி மற்றும் மனித உரிமை- கவரப்பேட்டை
ஜி.வெங்கசேடன்- கவரப்பேட்டை- கும்மிடிப்பூண்டி
என்.பார்த்திபன்- பாதிரிவேடு- மாவட்ட குற்றப்பிரிவு
ஏ.ஜி.சந்திரசேகரன்- கவரப்பேட்டை- கட்டுப்பாட்டு அறை
சி.சுகந்தி- கே.கே.சத்திரம்- பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவு
டி.வினோத்குமார்- வெங்கல்- பாதிரிவேடு
கே.குமார்- கடம்பத்துார்- சமூக நீதி மற்றும் மனித உரிமை
எம்.மாரிமுத்து- பாதிரிவேடு- திருத்தணி
எஸ்.ஆறுமுகம்- பெரியபாளையம்- நில அபகரிப்பு தடுப்பு பிரிவு
என்.கே.ஆறுமுகம்- நில அபகரிப்பு தடுப்பு பிரிவு-ஆரம்பாக்கம்
இ.சுரேஷ்- நில அபகரிப்பு தடுப்பு பிரிவு- ஆர்.கே.பேட்டை
ஏ.சிவா- ஆர்.கே.பேட்டை- பெரியபாளையம் கலால்
எஸ். சீனிவாசன்- வெங்கல்- கனகம்மா சத்திரம்
எம்.ஜெபதாஸ்- பொன்னேரி- மாவட்ட குற்ற ஆவண காப்பகம்

