/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ --- வீலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
/
டூ --- வீலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜன 26, 2024 08:12 PM
திருத்தணி:ஆந்திர மாநிலம் நகரி அடுத்த மங்களம் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் தாழவேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின்படி போலீசார் நிறுத்தி சோதனை நடத்தியபோது, பிளாஸ்டிக் கவரில், 3,000 ரூபாய் மதிப்புள்ள 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.
தொடர்ந்து, வாகனத்தில் வந்த அரக்கோணம் தாலுகா பள்ளியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை, 55, திருத்தணி தாலுகா வேலஞ்சேரியைச் சேர்ந்த கோவிந்தசாமி, 55, எனவும், ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து திருத்தணியில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

