/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் - கார் மோதல் இருவர் படுகாயம்
/
பைக் - கார் மோதல் இருவர் படுகாயம்
ADDED : ஜூலை 01, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை,:பைக் மீது கார் மோதிய விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 48. இவர், நேற்று முன்தினம் உறவினர் உஷாராணி, 42, என்பவருடன், திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணாகுப்பம் அருகே சென்ற போது, எதிரே வந்த 'மாருதி டிசையர்' கார் மோதியது. இதில், வேலு மற்றும் உஷாராணி படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.