/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
/
திருவாலங்காடில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 02:47 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அமைந்துள்ளது.
இங்குள்ள சர்க்கரை ஆலை ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, இப்பகுதிவாசிகள் திருவள்ளூர், அரக்கோணம், கனகம்மாசத்திரம், தக்கோலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலையிலேயே நின்றவாறு பேருந்துக்காக பயணியர் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
மேலும், மரத்தின் கீழ் வெயில் மற்றும் மழை நேரங்களில் பேருந்துக்காக பயணியர் காத்திருப்பதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சில நேரங்களில் சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் மீது, வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
எனவே, திருவாலங்காடு ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.