/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய்களை துார்வார வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
கால்வாய்களை துார்வார வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
கால்வாய்களை துார்வார வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
கால்வாய்களை துார்வார வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2025 08:16 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று, தலைவர் ருக்மணி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகேஸ்வரி, முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:
குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு ஏற்ப, பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டும். மாதந்தோறும் பேரூராட்சி மன்ற கூட்டத்தை நடத்தி, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
பருவமழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி, சீரமைக்க வேண்டும். பூங்காக்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
தெருவிளக்குகள் பொருத்துவதற்கு தேவையான மின்வழித்தடங்கள் ஏற்படுத்த, மின்வாரியத்திடம் வலியுறுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மீன் மற்றும் இறைச்சி கூடம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.