/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.டி.ஐ.,யில் வந்த பதிலால் அதிர்ச்சி அதிகாரிகள் அலட்சியத்தை போக்குவது யார்?
/
ஆர்.டி.ஐ.,யில் வந்த பதிலால் அதிர்ச்சி அதிகாரிகள் அலட்சியத்தை போக்குவது யார்?
ஆர்.டி.ஐ.,யில் வந்த பதிலால் அதிர்ச்சி அதிகாரிகள் அலட்சியத்தை போக்குவது யார்?
ஆர்.டி.ஐ.,யில் வந்த பதிலால் அதிர்ச்சி அதிகாரிகள் அலட்சியத்தை போக்குவது யார்?
ADDED : ஜூன் 21, 2025 12:55 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சி மருதவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் 65. இவருக்கு, 2022--- - 23ம் ஆண்டு பி.எம்.ஏ.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்ட பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளருக்கு வீடு கட்ட மூன்று தவணையாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது வழக்கம். நாராயணனுக்கு மூன்றாவது தவணை பணம், ஓராண்டாக வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த நாராயணன் மகன் கண்ணன், கடந்த 9ம் தேதி ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் வாயிலாக தகவல் கோரியிருந்தார்.
இந்த கடிதத்தில், 'பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தின் கீழ் நாராயணன் என்பவருக்கு வீடு கட்ட வழங்கப்பட்ட மானிய தொகை, தேதி வாரியாக, தொகை வாரியாக எவ்வளவு, மீதம் வழங்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு' என, தகவல் கோரியிருந்தார்.
பொது தகவல் அலுவலரும், திருவாலங்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான லீலன் அனுப்பிய பதில் கடிதத்தில், 'கண்ணன் என்பவருக்கு பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தில் வீடு கட்ட பணியாணை வழங்கப்படவில்லை. குடிசை மாற்று வாரியத்தை தொடர்பு கொள்ளவும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை பார்த்த கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கண்ணன் கூறியதாவது:
பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தில் வீடு வழங்கப்பட்ட விபரம் குறித்து தகவல் கோரியிருந்தேன். கேள்விக்கு சம்பந்தமில்லாமல், பி.எம்.ஏ.ஒய்., திட்டத்தின் கீழ் பணியாணை வழங்கப்படவில்லை. குடிசை மாற்று வாரியத்தை அணுகுமாறு பதில் அளித்துள்ளார்.
கேள்வி குறித்து கவனம் செலுத்தாமல், மேம்போக்கான பதில் அனுப்பும் பி.டி.ஓ., அலுவலக அதிகாரி மீது, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.