/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் ஊட்டும் அறை கட்டப்படுமா?
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் ஊட்டும் அறை கட்டப்படுமா?
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் ஊட்டும் அறை கட்டப்படுமா?
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் ஊட்டும் அறை கட்டப்படுமா?
ADDED : ஜன 26, 2024 07:23 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பால் ஊட்டு அறை இல்லாததால், சிரமப்படுகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மனு அளிக்க, ஏராளமான பெண்கள், கைக்குழந்தைகளுடன் வருகின்றனர். மேலும், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும், பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.
இவ்வாறு வரும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட தனி அறையில்லாததால், சிரமப்படுகின்றனர். எனவே, கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகளுக்கு பால் ஊட்டும் அறை கட்டித்தர வேண்டும் என, பெண்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.