/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை வளைவு குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
/
சாலை வளைவு குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
சாலை வளைவு குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
சாலை வளைவு குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
ADDED : ஜன 26, 2024 07:31 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பி.என்.கண்டிகை கிராமத்தில், சாலை வளைவையொட்டி ஊர் பொதுக்குளம் வளைவுப்பகுதியில் அமைந்து உள்ளது. வெள்ளக்குளம், ஆலாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்த குளத்தில் ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி, கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகிறது.
சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் குளத்திற்கு தடுப்பு சுவர் இல்லாததால் அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாத நிலையில், இரவு நேரங்களில் வேகமாக சென்றுவரும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது, குளத்தில் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அசம்பாவிதங்களை தவிர்க்க, சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கவும், அதில் ரிப்ளக்டர்கள் பொருத்தி எச்சரிக்கை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

