ADDED : ஜூன் 03, 2025 07:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:சேலம் மாவட்டம் தாகதாபட்டி மணினுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா, 22. இவர், இரண்டு நாட்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்துள்ளார். பின், கோவில் பின்புறத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற போது, தண்ணீர் மூழ்கி இறந்துள்ளார்.
நேற்று காலை குளத்திற்கு சென்ற பக்தர்கள், சடலம் மிதப்பதை பார்த்து போலீசாருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளைஞரின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.