/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மதமோதலை துாண்டும் பேச்சு ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு
/
மதமோதலை துாண்டும் பேச்சு ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு
மதமோதலை துாண்டும் பேச்சு ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு
மதமோதலை துாண்டும் பேச்சு ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு
ADDED : மே 23, 2025 01:56 AM
முத்துப்பேட்டை:மதமோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில், மே 17ம் தேதி, பா.ஜ., சார்பில், வக்ப் சட்ட திருத்தத்தை ஆதரித்தும், பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மதமோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக, பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலர் முருகானந்தம், மாவட்ட தலைவர் செல்வம், தேசிய சிறுபான்மை தலைவர் சையது இப்ராஹிம் ஆகியோர் மீது முத்துப்பேட்டை போலீசில், உதவி ஆய்வாளர் ராகுல் புகார் கொடுத்தார். போலீசார் நான்கு பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.