/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கொலை வழக்கில் 4 பேர் கைது; 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
/
கொலை வழக்கில் 4 பேர் கைது; 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
கொலை வழக்கில் 4 பேர் கைது; 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
கொலை வழக்கில் 4 பேர் கைது; 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கினர்
ADDED : ஜூன் 08, 2025 04:18 AM

துாத்துக்குடி : ஆட்டோவில் சென்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்துார், வானரமுட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் என்பவர், 2023 ஏப்., 9ல் ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளத்துரைச்சி, 28, என்பரை ஆட்டோவில் ஏற்றி சென்றார்.
நாச்சியார்பட்டி, காளாம்பட்டி சாலை அருகே, மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவை வழிமறித்து, சண்முகராஜை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற வெள்ளைத்துரைச்சியை, அந்த கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. நாலாட்டின்புத்துார் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த, 2 ஆண்டுகளாக கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அவர்கள் விசாரணையில், வானரம்படி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன், 29, அவரது சகோதரர் ராஜா, 32, உறவினர்களான கயத்தாறு வடக்கு கோனார்கோட்டையை சேர்ந்த சங்கிலிபாண்டி, 28, கோவில்பட்டி இந்திராநகரைச் சேர்ந்த சங்கிலிபாண்டியன், 55 ஆகியோர், கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறுகையில், ''ஆட்டோ டிரைவர் சண்முகராஜுக்கும் கணேசன் என்பவருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் பதவி தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. முன் விரோதத்தினால் கணேசன் உட்பட, நான்கு பேரும் சேர்ந்து சண்முகராஜை வெட்டியபோது, தடுக்க முயன்ற வெள்ளைதுரைச்சியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்,'' என்றார்.