/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மீனவர்களுக்கு போதை ஊசி விற்பனை: இருவர் சிக்கினர்
/
மீனவர்களுக்கு போதை ஊசி விற்பனை: இருவர் சிக்கினர்
ADDED : ஜூன் 12, 2025 02:11 AM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் மீனவர்களை குறி வைத்து, போதை ஊசிகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடியில், மீனவர்கள், கட்டட தொழிலாளர்கள், மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், போலீசார், தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில், நேற்று திடீர் சோதனை நடத்தினர். நேரு காலனியில் சந்தேகப்படும்படியாக, இரண்டு பைக்குகளில் நின்றவர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் 1 மி.லி., அளவு கொண்ட, 800 ஊசி மருந்துகள் இருந்தன. வலி நிவாரணியான அந்த ஊசியை, மீனவர்களிடம் போதைக்காக அவர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் நேரு காலனியை சேர்ந்த செல்வகுமார், 44, திரேஸ்புரத்தை சேர்ந்த ரஹீம், 48, என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.