/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வெள்ள சேதம் பார்வையிட இன்று மீண்டும் வருகிறது மத்திய குழு
/
வெள்ள சேதம் பார்வையிட இன்று மீண்டும் வருகிறது மத்திய குழு
வெள்ள சேதம் பார்வையிட இன்று மீண்டும் வருகிறது மத்திய குழு
வெள்ள சேதம் பார்வையிட இன்று மீண்டும் வருகிறது மத்திய குழு
ADDED : ஜன 12, 2024 12:47 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று மீண்டும் பார்வையிடுகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ல் அதிகன மழை பெய்தது. இதில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின. தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழப்புகளுடன் ஏராளமானவர்கள் வீடு, சொத்துக்களை இழந்தனர். இந்த பாதிப்புகளை ஏற்கனவே மத்திய குழுவினர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் டிசம்பரில் பார்வையிட்டு சென்றனர்.
இருப்பினும் அப்போது மழை நீர் முழுமையாக வடியாமல் இருந்ததால் பாதிப்புகளை முழுமையாக கண்டறிய முடியவில்லை. எனவே தற்போது மத்திய குழுவினர் மீண்டும் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். இரு குழுக்களாகப் பிரிந்து ஏரல், முறப்பநாடு, தூத்துக்குடி உட்பட 24 இடங்களில் ஆய்வு நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ள இடங்களில் நேற்று பார்வையிட்டனர்.

