ADDED : ஜூலை 22, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த, மேல்பட்டு பகுதியை சேர்ந்த கட்டட கூலி தொழிலாளி விஷ்ணு, 24. பெங்களூரு, பொம்நல்லி பகுதியிலிருந்து, 7 கிலோ சந்தன கட்டையை, தனியார் பஸ்சில் திருப்பத்துாருக்கு நேற்று கடத்தி வந்தார்.
திருப்பத்துார் டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, புதுப்பேட்டை ரோடு பகுதி வழியாக வந்த பஸ்சை நிறுத்தி விஷ்ணுவிடம் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில், சந்தன கட்டை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.