/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது
/
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூன் 19, 2025 01:59 AM
திருப்பத்துார், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நீலிக்கொல்லையை சேர்ந்தவர் இம்தியாஸ் அஹமது, 66. தோல் தொழிற்சாலை உரிமையாளர். இவர் மனைவி சபிதா குல்சும், 55. இவர்களது வீட்டு வேலைக்காரர் வாணியம்பாடியை சேர்ந்த சக்திவேல், 37. கடந்த, 16ல் இம்தியாஸ் அஹமது வீட்டில், 4 பேர் கும்பல் புகுந்து, மூவரையும் கட்டிப்போட்டது.
அங்கிருந்து சபீதா சுல்சும் தப்பி வெளியே ஓடி கூச்சலிட்டார். அதனால் கொள்ளை கும்பல் தப்பியது. வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணையில், அக்கும்பலுக்கும், வீட்டு வேலைக்காரர் சக்திவேலுவுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் சக்திவேல், திருப்பத்துார் அடுத்த அகரம் கொல்லகொட்டாயை சேர்ந்த இளவரசன், 49, என்பவருடன் சேர்ந்து, இம்தியாஸ் அஹமது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். இளவரசன் தனக்கு பழக்கமான ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சாந்தகுமாரியிடம் ஆலோசனை கேட்டார். அவர், திருமலை திருப்பதி தேவஸ்தான போலீஸ்காரர் அருண்குமார், 45, என்பவரின் உதவியை நாடினர். அவரும், 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை ஏற்பாடு செய்து, இம்தியாஸ் அஹமது வீட்டிற்கு கொள்ளையடிக்க அனுப்பினார்.
வேலைக்காரர் சக்திவேலை கைது செய்த போலீசார், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட, போலீஸ்காரர் அருண்குமார் மற்றும் திருப்பதியில் பதுங்கியிருந்த சாந்தகுமாரி, இளவரசன், ஆகிய, 4 பேரையும் கைது செய்து, தலைமறைவான, 4 பேர் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.