ADDED : ஜூலை 14, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;வெறி நாய்கள் கடித்து குதறியதில், 10 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.
காங்கயம், பழையகோட்டை ரோடு மூர்த்திரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 45; காய்கறி கடை நடத்தி வருகிறார். கூடுதல் வருமானத்துக்காக, 17 வெள்ளாடுகளை மேய்த்து வருகின்றார். நேற்று முன்தினம் தோட்டத்து பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.
நேற்று காலை சென்று பார்த்த போது வெறி நாய்கள் அனைத்து ஆடுகளையும் கடித்து குதறியிருந்து தெரிந்தது. அதில், பத்து ஆடுகள் இறந்தது. ஏழு ஆடுகள் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. காங்கயம் கால்நடை மருத்துவர் ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். வருவாய்த்துறையினர் பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.