/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டி
/
பெங்களூரு ரயிலில் கூடுதல் பெட்டி
ADDED : ஜூலை 14, 2024 12:31 AM
திருப்பூர்:தினமும் காலை, 10:10 க்கு கன்னியாகுமரியில் புறப்படும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (எண்:16525) நாகர்கோவில் வழியாக பயணித்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் வருகிறது. கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு வழியாக, இரவு, 11:00 மணிக்கு கோவை வரும் இந்த ரயில், 11:45 க்கு திருப்பூரை கடக்கிறது. மறுநாள் காலை, 6:40 க்கு பெங்களூரு சென்றடைகிறது.
22 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், நான்கு முன்பதிவு பெட்டிகள் இருந்தது. முன்பதிவில்லா டிக்கெட் பெற்று பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இம்மாதம், 24 ம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்படும். மைசூர் - மயிலாடுதுறை, மைசூரு - துாத்துக்குடி, ரயிலின் இருமார்க்கத்திலும் தலா இரு பொது பெட்டி இணைக்கப்படும், என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.