/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட தடை
/
கல்லுாரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட தடை
ADDED : ஜூன் 01, 2024 12:11 AM

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானம், 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெரிய மைதானம் என்பதால், இங்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் உடற்பயிற்சி செய்ய காலை, மாலை வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குழுவாக நாள் முழுதும் விளையாடுகின்றனர். காற்றோட்டம், விலாசமான பகுதியாக இருப்பதால், பெண்கள் உட்பட குடும்பத்துடன் பலர் உடற்பயிற்சிக்கு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, வாலிபர்கள் டூவீலரை மைதானத்துக்குள் வேகமாக இயக்கி 'ஸ்டண்ட்' செய்வது, வாகனங்களை இடையூறாக வழித்தடத்தில் நிறுத்தி வைப்பது, கிரிக்கெட் விளையாடி, உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இரவு, 7:00 மணி வரை மைதானத்துக்குள் பிரவேசிப்பதால் விரும்பதகாத செயல்களும் நடந்து வந்தது.
கல்லுாரி நிர்வாகம் தரப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்,' கல்லுாரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி இல்லை. டூவீலர்களுடன் மைதானத்துக்குள் நுழைய அனுமதி இல்லை. நடைபயிற்சி மேற்கொள்வோர் காலை, 6:00 முதல் 8:00 மணி வரையும், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை மட்டும் மைதானத்தை பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட நேரமுறையை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.