/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாப பலி
/
மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாப பலி
ADDED : ஜூலை 14, 2024 12:14 AM
திருப்பூர்,'அனுப்பர்பாளையத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.திருப்பூர், அனுப்பர்பாளையம், ஜீவா வீதியை சேர்ந்த பாத்திர தொழிலாளி மணிகண்டன்.
இவரின் மகன் சுதீஷ், 13. அருகிலுள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு 8:00 மணியளில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள குழாயைத் தொட்ட போது சுதீசை மின்சாரம் தாக்கியது. இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.