/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருள் சூழ்ந்த மேம்பாலம்: ஊத்துக்குளி ரோட்டில் அவலம்
/
இருள் சூழ்ந்த மேம்பாலம்: ஊத்துக்குளி ரோட்டில் அவலம்
இருள் சூழ்ந்த மேம்பாலம்: ஊத்துக்குளி ரோட்டில் அவலம்
இருள் சூழ்ந்த மேம்பாலம்: ஊத்துக்குளி ரோட்டில் அவலம்
ADDED : ஜூன் 01, 2024 12:14 AM

திருப்பூர்;ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மேம்பாலம் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், போதை ஆசாமிகள் வசதியாக ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், எஸ்.ஆர்.சி., மில்ஸ் அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஊத்துக்குளி ரோட்டிலிருந்து ரயில்வே பாதையைக் கடந்து சூரியா நகர் பகுதியில் சென்று சேருகிறது. இதன் மூலம் ரயில்வே கேட் மற்றும் ஒற்றைக் கண் தரைப்பாலம் வழியாக ரயில்வே பாதையைக் கடந்து செல்லும் வாகனப் போக்குவரத்து சற்று எளிதாகியது.
இந்த பாலம் நீண்ட நாள் இழுபறிக்குப் பின் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மீது வரிசையாக தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு பாலம் மீது போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தெரு விளக்குகள் ஒன்று கூட எரியாமல் காணப்படுகிறது. இதனால், பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து போக்குவரத்துக்கு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்தும் விதமாக மாறி விட்டது.
மேலும், இந்த இருளைப் பயன்படுத்திக் கொண்டு போதை ஆசாமிகள் இப்பாலம் மீது முகாமிட்டுள்ளனர். மாலை முதல் இரவு நீண்ட நேரம் வரை இந்த பாலத்தில் ஆங்காங்கே போதை ஆசாமிகள் கும்பலாகச் சேர்ந்து மது அருந்துவதும், போதையில் ஆட்டம் போடுவது, தின்பண்டங்கள் மற்றும் காலி மது பாட்டில்களைச் வீசிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் இதன் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது. தெரு விளக்குகள் முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.