/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுஷ பூஜை வழிபாடு பக்தர்கள் பங்கேற்பு
/
அனுஷ பூஜை வழிபாடு பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 21, 2024 11:54 PM

உடுமலை;உடுமலை, ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவிலில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.
இக்கோவிலில் விக்னேஸ்வர பூஜையுடன் அனுஷ பூஜை வழிபாடு துவங்கியது. தொடர்ந்து சங்கல்பம், ஆத்ம மற்றும் பீட பூஜை நடந்தது. அனுஷ நட்சத்திர பூஜை, குரு தியானம் நடந்தது.
காஞ்சி மகா பெரியவா அஷ்டோத்திர அர்ச்சனையை தொடர்ந்து தீபாராதனை, ஆரத்தி வழிபாடு நடந்தது. வழிபாட்டில் விநாயகர் அகவல், சிவ புராணம், திருத்தொண்டர் தொகை, கோளாறு திருப்பதிகம், மகா பெரியவா 108 போற்றி, தேவாரம், திருப்புகழ், மகாலட்சுமி மந்திரம் உள்ளிட்ட பாராயணங்கள் நடந்தன.
வேத பாராயணம், தீபாராதனை மற்றும் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.