/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மண் வளம் காக்கும் நுண்ணுாட்டம்' மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல்
/
'மண் வளம் காக்கும் நுண்ணுாட்டம்' மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல்
'மண் வளம் காக்கும் நுண்ணுாட்டம்' மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல்
'மண் வளம் காக்கும் நுண்ணுாட்டம்' மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : ஜூலை 14, 2024 12:51 AM
திருப்பூர்;'மண் வளம் மேம்படுத்த, நுண்ணுாட்டச் சத்து இட வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காங்கயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிக்கு மானிய விலையில் நுண்ணுாட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி ஆகியோர் வழங்கினர்.
ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:
மாவட்டத்தில் முக்கிய வேளாண் பயிர்களான நெல், தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளும், தோட்டக்கலை பயிர்களான மஞ்சள், வாழை, தென்னை மற்றும் பிற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
அனைத்து பயிர்களும் நல்ல விளைச்சல் பெற நுண்ணுாட்டம் முக்கியம்.பயிர் வளர்ச்சிக்கு முக்கியமான சத்துகளான தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்ட சத்துகள்; இரும்பு, துத்தநாகம், போரான், காப்பர், மாலிப்டினம் போன்ற, 16 நுண்சத்துகளும் தேவை. மண்ணுக்கு தொழு உரம் இடும் போது, பசுந்தாள் உரப்பயிர்கள் விதைத்து, வளர்ந்த பின் உழும் போது, நுண்சத்துகள் மண்ணில் சேர்ந்து, மண்ணை வளப்படுத்துகிறது.
இத்தகைய நடைமுறையை பின்பற்றாமல், தொடர்ந்து உயர் விளைச்சல் தரக்கூடிய பயிர்களை மண்ணுக்கு ஓய்வின்றி பயிரிடுவதால், மண்ணில் நுண்ணுாட்ட சத்துகள் வெகுவாக குறைந்துவிடுகிறது; இதனால், விளைச்சலும் குறைகிறது.
மண்ணில் நுண்ணுாட்ட சத்துகளின் நிலையை மேம்படுத்த செயற்கை நுண்ணுாட்ட சத்துகளை வேளாண்மை துறை பயிர்களுக்கு தக்கவாறு, 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது. அவற்றை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பூர், ஜூலை 14-
'மண் வளம் மேம்படுத்த, நுண்ணுாட்டச் சத்து இட வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.காங்கயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிக்கு மானிய விலையில் நுண்ணுாட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி ஆகியோர் வழங்கினர்.
ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:மாவட்டத்தில் முக்கிய வேளாண் பயிர்களான நெல், தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளும், தோட்டக்கலை பயிர்களான மஞ்சள், வாழை, தென்னை மற்றும் பிற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. அனைத்து பயிர்களும் நல்ல விளைச்சல் பெற நுண்ணுாட்டம் முக்கியம்.பயிர் வளர்ச்சிக்கு முக்கியமான சத்துகளான தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்ட சத்துகள்; இரும்பு, துத்தநாகம், போரான், காப்பர், மாலிப்டினம் போன்ற, 16 நுண்சத்துகளும் தேவை. மண்ணுக்கு தொழு உரம் இடும் போது, பசுந்தாள் உரப்பயிர்கள் விதைத்து, வளர்ந்த பின் உழும் போது, நுண்சத்துகள் மண்ணில் சேர்ந்து, மண்ணை வளப்படுத்துகிறது.இத்தகைய நடைமுறையை பின்பற்றாமல், தொடர்ந்து உயர் விளைச்சல் தரக்கூடிய பயிர்களை மண்ணுக்கு ஓய்வின்றி பயிரிடுவதால், மண்ணில் நுண்ணுாட்ட சத்துகள் வெகுவாக குறைந்துவிடுகிறது; இதனால், விளைச்சலும் குறைகிறது.மண்ணில் நுண்ணுாட்ட சத்துகளின் நிலையை மேம்படுத்த செயற்கை நுண்ணுாட்ட சத்துகளை வேளாண்மை துறை பயிர்களுக்கு தக்கவாறு, 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது. அவற்றை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.