/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மத்திய அரசை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், குமரன் சிலை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்து பேசினார். எம்.எல்.ஏ., செல்வராஜ் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜன் உட்பட பலர் பங் கேற்று கோஷங்கள் எழுப்பினர்.